இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்திடம் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, சாரி அரசியல் தொடர்பான கேள்வி கேட்காதீங்க என தெரிவித்தார்.
அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரக கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், பிரபல நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. கோல்டன் விசா வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து மந்திருக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில், ஆன்மிக பயணமாக இமயமலைக்கு பயணம் எப்படி உள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினி, ‘ஒவ்வொரு வருடமும் போகிறேன். கேதர்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு செல்ல போகிறேன்’ என்றார்.
அடுத்து மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ‘சாரி அரசியல் தொடர்பான கேள்வி கேட்காதீங்க’ என தெரிவித்தார்.
அடுத்ததாக இசையா.? கவிதையா என்ற போட்டி தமிழ் திரைப்பட உலகில் உள்ளது தொடர்பான கேள்விக்கு ‘அண்ணா நோ கமெண்ட்ஸ்’ என தெரிவித்தார்.