இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் – 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது.

இந்த நிலையில், இந்தியன் – 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.