நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரல்!

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சந்தோசமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 35 வயதாகும் நடிகை சுனைனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதா என அந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, ட்ரிப், எஸ்டேட், லத்தீன் மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சுனைனா நடிப்பில் வெளியான ஒரு சில படங்களைத் தவிர பல படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. முன்னணி நடிகையாக வளர முடியாமல் பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த வருகிறார்.

கடைசியாக கோலிவுட்டில் அவர் நடித்த ட்ரிப், லத்தி மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன. ரெஜினா படத்தின் தோல்விக்கு பிறகு அவருக்கு புதிதாக எந்தவொரு பட வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை. திறமையான நடிகையாக இருந்தாலும் சினிமாவில் அவரது மார்க்கெட் ரொம்பவே அடிவாங்கியது. சில்லுக்கருப்பட்டி, நீர்ப்பறவை படங்களில் எல்லாம் அவரது நடிப்பு வேறலெவலில் இருக்கும். கடைசியாக வெளியான இன்ஸ்பெக்ட்டர் ரிஷி வெப்சீரிஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகை சுனைனாவுக்கு 35 வயதாகிறது. பெரிதாக இதுவரை எந்த நடிகருடன் கிசுகிசுவில் எல்லாம் சிக்கவில்லை. ஆரம்பத்தில் நகுலுடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்த நிலையில், அவருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், உடனடியாக நகுலுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனைனா தனது கை மீது காதலரின் கையை வைத்தபடி எடுத்த போட்டோவை வெளியிட்டு லாக்ட் என்பதை உணர்த்த பூட்டு எமோஜியை பதிவிட்டுள்ளார்.

நடிகை சுனைனா காதலில் விழுந்து விட்டார் என்றும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதா? காதலர் முகத்தை காட்டலாமே? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், யாராவது சினிமா நடிகரா? அல்லது தொழிலதிபரா? உங்களை கட்டிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு சொல்லுங்க என சுனைனாவை ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். ரசிகர்களுக்காக விரைவில் அடுத்த அப்டேட்டை சுனைனா வெளியிடுவார் என தெரிகிறது. கடந்த ஒரு வருடமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து விட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேட்கின்றனர்.