அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ டிசம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிப்பு!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ வரும் டிசம்பர் 6 அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், வரும் ஆக.15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இறுதிகட்டப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.