நடிகை கீர்த்தி சுரேஷ் தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்த வகையில் இப்போதும் ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினி உடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.
கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியை விட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
இதற்கிடையே தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவருக்கு மாமன்னன் திரைப்படம் மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்தது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு சைரன் படத்தில் நடித்த அவருக்கு தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் ஹிந்தி தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்திலும் நடித்துவருகிறார் அவர். மேலும் ரிவால்வர் ரீட்டா என்ற படத்திலும் நடித்துவருகிறார். அதேபோல் பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கல்கி படத்தில் ஒரு ரோபோவுக்கு பின்னணி குரலையும் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். அப்படி அவர் தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்த வகையில் இப்போதும் ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த முறை அவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் கொஞ்சம் கிளாமராக காட்சியளிக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.