தனுஷுக்கு ஜோடியாகும் நடிகை டிரிப்தி டிம்ரி!

தனுஷ் மீண்டும் பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ‘தேரா இஷ்க் மெய்ன்’ என்ற டைட்டிலில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவுள்ளவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். கோலிவுட்டில் பிசியான ஹீரோவாக வலம் வரும் இவர் தற்போது தனது 50 வது படமான ராயனில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதை தொடர்ந்து தற்போது புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷின் பாலிவுட் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழை போல இந்தியிலும் தனுஷுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பாலிவுட்டில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ’தேரா இஷ்க் மெய்ன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ‘தேரா இஷ்க் மெய்ன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை டிரிப்தி டிம்ரி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் பான் இந்திய அளவில் வெளியான ‘அனிமல்’ படத்தின் வாயிலாக சென்சேஷனல் நடிகையாக மாறியவர் டிரிப்தி டிம்ரி. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரன்வீர் கபூர் ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் வசூலில் சக்கை போடு போட்டிருந்தது. இதனையடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் பேட் நியூஸ் என்ற படம் வெளியாகியிருந்தது. இப்படத்திலும் கவர்ச்சி காட்சிகளில் நடித்து பரபரப்பபை கிளப்பியிருந்தார். இந்நிலையில் டிரிப்தி டிம்ரி தற்போது தனுஷ் ஜோடியாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.