தற்போது பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக மாறி உள்ள நடிகை நோரா ஃபதேஹி, சினிமாவிற்கு வந்த புதிதில் பட்ட கஷ்டத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
நடிகை, மாடல் , நடனக் கலைஞர் , பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவராக இருக்கிறார் நோரா ஃபதேஹி. இவர் 2015 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் சீசன் 9ல் நோரா ஃபதேஹிவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை வென்று 84 நாட்கள் வீட்டில் இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் வரும் மனோகரி என் பாடலுக்கு நடனம் ஆடி உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்கள் செல்லமாக மனோகரி என்றே அழைத்து வருகின்றனர். அந்தப்படம் மட்டுமில்லாமல், தமிழில், கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேஹி தான். தற்போது அவர் பாலிவுட் பட வாய்ப்பை பெற ஐட்டம் பாடல்களுக்கு ஆடி பெயர் எடுத்துள்ளார்.
நடிகை நோரா அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியாவிற்கு வந்த போது,என்னிடம் ரூ. 5,000 ரூபாய் மட்டுமே இருந்தது, நான் என் நண்பர்கள் ஒன்பது பேருடன் மூன்று படுக்கை அறை கொண்ட வீட்டில் குடியிருந்தோம். என் அறையில் வேறு இரண்டு பெண்கள் பகிர்ந்து கொண்டனர். அந்த வாழ்க்கை நரகமான வாழ்க்கையாக இருந்தது. அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் ரொம்ப பயமா இருக்கு. அந்த நேரத்தில், சாப்பாட்டுக்கு கூட வழியில்ல, ஒரு நாளைக்கு ஒரு முட்டை மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிட்டேன். தனக்கு கிடைத்த சம்பளத்தில் பெரும்பகுதியை வாய்ப்பு வாங்கித் தரும் ப்ரோக்கர்ஸ் எடுத்துக் கொண்டு குறைந்த சம்பளத்தையே எனக்கு கொடுத்தனர். ஆனால், தற்போது ஒரு பாடலுக்கு ரூ.1 கோடி முதல் இரண்டு கோடி வாங்குகிறேன். இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி இருந்தாலும் பழசை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன் என்று நோரா ஃபதேஹி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.