தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் திரைப்படம் நேற்று திரையில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் வெளியாகியிருக்கும் இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து ராயன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது

தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று திரையில் வெளியானது. தனுஷ் நடிக்கும் ஐம்பதாவது திரைப்படம், தனுஷே இயக்கி இருக்கும் திரைப்படம், பக்காவான ஸ்டார் காஸ்டிங் என பல விஷயங்கள் ராயன் திரைப்படத்தில் ஸ்பெஷலாக அமைந்தன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியது. இதன் காரணமாக இப்படத்தின் முன்பதிவும் அமோகமாக இருந்தது. தனுஷின் திரைப்பயணத்திலேயே முன்பதிவின் மூலம் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்தது. இவ்வாறு அனைத்துமே ராயன் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ள நிலையில் படத்தின் விமர்சனங்களும் பாஸிட்டிவாகவே உள்ளது.

படம் பார்த்த அனைவரும் தனுஷையும் படத்தையும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் தனுஷ் ராயன் படத்தில் தனித்து தெரிகிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். என்னதான் கதையில் புதுமை இல்லை என்றாலும் அதனை தனுஷ் சொன்ன விதம் ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். பா.பாண்டி திரைப்படத்தின் மூலமே தனுஷ் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தை ஒரு பீல் குட் படமாக கொடுத்து வெற்றிகண்டார் தனுஷ். அதைத்தொடர்ந்து ராயன் திரைப்படத்தை தன் முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஜானரில் கொடுத்து அசத்தியுள்ளார் தனுஷ்.

இந்நிலையில் ராயன் திரைப்படம் முன்பதிவியிலேயே அதிக வசூலை ஈட்டிய நிலையில் நேற்று முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. தனுஷின் திரைப்பயணத்திலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்திருக்கின்றது. நேற்று வெளியான ராயன் முதல் நாளில் மட்டும் 13 கோடி முதல் 15 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தனுஷின் திரைப்பயணத்திலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்துள்ளது. பண்டிகை நாட்களில் வெளியாகாமல் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ள ராயன் போக போக வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.