இருதுருவம், நேர்கொண்ட பார்வை, வான் மூன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை அபிராபி சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் சுடர் என்ற முதன்மை பாத்திரத்தில் அபிராபி நடிக்கவுள்ளார். சுடர் என்ற பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜாஸ்மின் ராத், அத்தொடரிலிருந்து விலகியதால், அவருக்கு பதிலாக அபிராமி நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு நினைத்தாலே வந்தாய் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தனா பொதுவல் நடித்தார். கதைப்படி அவர் இறந்துவிட்டார். அவரின் தங்கையான ஜாஸ்மின் ராத் (சுடர்) தற்போது கணேஷுக்கு ஜோடியாகவுள்ளார். கதையின் நாயகியாகவும் சுடர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவரான கணேஷ் வெங்கட்ராமன் தனது மனைவி கீர்த்தனா இறந்ததைத் தாங்க முடியாமல் குழந்தைகளை புறக்கணிக்கிறார். அவர்களை பராமரிக்கும் பணிக்காக கணேஷ் வீட்டிற்கு வரும் சுடர் என்ற பாத்திரம், கீர்த்தனாவின் சகோதரி. ஆனால் அந்த வீட்டில் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. தனது அக்கா வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ளது சுடருக்கும் தெரியாது. இதனிடையே இறந்துபோன கீர்த்தனா ஆவியாக இருந்து தனது குழந்தைகளுக்காக சுடரை அவருக்கே தெரியாமல் வழிநடத்துகிறார். இதுவே நினைத்தேன் வந்தாய் தொடரின் மையக்கதை.
நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் பாத்திரத்தில் நடித்துவந்த ஜாஸ்மின் ராத், இத்தொடரில் இருந்து விலகுவதால், அவருக்கு பதிலாக நடிகை அபிராபி நடிக்கவுள்ளார். இவர் பல படங்களில் துணை பாத்திரங்களில் நடித்திருந்தாலும், 2018-ல் நோட்டா படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நாயகியானார். அதனைத் தொடர்ந்து களவு, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்ரி, வான் மூன்று, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் அபிராபி நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் அபிராபி புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.