கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

கூலி படத்தின் இன்று வெளியிட்டுள்ள அப்டேட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் பீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூலி படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில், படம் குறித்த அப்டேட்கள் நேற்று முன் தினம் முதல் அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழு வெளியிட்டு வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

இந்நிலையில், இன்று வெளியிட்டுள்ள அப்டேட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் பீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் ஸ்ருதிஹாசனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டரில், அவர் கையில் மம்பட்டி வைத்துக்கொண்டு உள்ளார். ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட அப்டேட்களில், மலையாள சினிமாக்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் நடிகரான சௌபின் சாஹிர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என படக்குழு தெரிவித்திருந்தது. இதுதான் படக்குழு வெளியிட்ட முதல் அப்டேட். அதன் பின்னர், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என தெரிவித்தது. தந்தையர் தினத்தில் சர்ப்ரைஸ் நியூஸ்.. கமல்ஹாசன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் இந்நிலையில் ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்கின்றார் என்ற தகவல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க காரணமான லோகேஷ்க்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.