பெண்களை வேட்டையாடும் ஆம்பள நரிகள்: ஸ்ரீரெட்டி!

சில நல்ல ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக உள்ளனர். அதே வேளையில் சில மோசமான நரிகள் பெண்களை சூறையாடிக் கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

நடிகர் விஷால் நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்தார். மேலும், பிறந்தநாள் அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஷாலிடம் ஹேமா கமிட்டி குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த நடிகர் விஷால் தமிழ்நாட்டிலும் விரைவில் நடிகர் சங்கம் சார்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சினிமா துறையில் இருக்கும் பெண்களின் குறைகள் கேட்கப்பட்டு சரி செய்யப்படும் என்றார்.

ஸ்ரீரெட்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஸ்ரீரெட்டி யார் என்றே தெரியாது என பேசியிருந்தார். மேலும், சினிமாவில் உப்புமா கம்பெனிகளால் தான் இதுபோன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், பெண்கள் அப்படி யாராவது தங்களிடம் தப்பாக பேசினாலோ நடக்க முயன்றாலோ செருப்பாலே அடிங்க என்றும் விஷால் கூறினார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி எக்ஸ் தளத்தில், “பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் உமனைசரான நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். உலகத்துக்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய ஃபிராடு என்று ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது, நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா, அதெல்லாம் சரி உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை ஏன் விட்டுச் சென்றனர். உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது, இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும், என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன” என நடிகரின் பெயரை குறிப்பிடாமல் ஸ்ரீரெட்டி ட்வீட் போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷாலின் பெயரை நேரடியாக சொல்லாமல் தொடர்ந்து மறைமுகமாகவே நடிகை ஸ்ரீரெட்டி ட்வீட்களை போட்டு வருவது ஏன் என்கிற கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் ஒரு மோசமான ஆம்பள நரி தொல்லைகளை கொடுத்துக் கொண்டே இருக்கும் எனக் குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார். பெண்கள் தங்கள் கனவை அடைவதற்காக படுக்கையை பகிர்ந்துக் கொண்டால், அவர்களை பிராஸ்டிட்யூட் என அழைக்கும் இந்த சமூகம் ஆண்களுக்கு அப்படி எந்த அவமான சொற்களையும் சொல்வது கிடையாது என புலம்பியுள்ளார்.

இருவர் சேர்ந்து தவறு செய்தால், பெண்கள் மீது தான் இந்த உலகம் தவறு சொல்கிறது. ஆண்கள் எப்போதுமே சரியானவர்கள் என்கிற பிம்பம் தான் இங்கே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சில நல்ல ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக உள்ளனர். அதே வேளையில் சில மோசமான நரிகள் பெண்களை சூறையாடிக் கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே இருப்பதாக ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார்.