ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது: ரஜினிகாந்த்

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது, சாரி என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியதாவது:-

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாதுங்க. சாரி. நடிகர் சூர்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி. அவருடைய படமும் நன்றாக ஓட வேண்டும் என வாழ்த்துகிறேன். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

மேலும் கார் பந்தயத்தை பார்க்க போறீங்களா என செய்தியாளர்கள் கேட்ட போது இல்லைங்க நேரம் இல்லை என தெரிவித்தார்.

கேரளாவில் பெரும் புயலை கிளப்பி வரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். டிவி, செய்தித்தாள்கள், சமூக ஊடகங்களிலும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த், தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.