ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், நம்முடைய எல்லைகளை நாம் தான் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தமிழில் அடுத்ததாக வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் பேட்ட ராப் படத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் சன்னி லியோன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன்களுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் சன்னி லியோன். இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரபுதேவா, சன்னி லியோன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். அப்போது அவர்களிடம் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதையடுத்து பேசிய சன்னி லியோன் அதிரடியாக பல விஷயங்களை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பிரபுதேவாவும் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்
நடிகை சன்னி லியோன் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பல அதிரடி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவ்வப்போது சில படங்களில் நடித்துள்ள சன்னி லியோன் நடிப்பில் அடுத்ததாக பேட்ட ராப் படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து சன்னி லியோன் நடித்துள்ளார். படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் படத்தின் பிரமோஷன்களுக்காக மும்பையிலிருந்து சன்னி லியோன் சென்னை வந்திருந்தார்.
இன்றைய தினம் கொச்சியில் செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கேரளாவில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சன்னி லியோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சன்னி லியோன், நம்முடைய எல்லைகளை நாம் தான் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும் என்றும், வெளியேற வேண்டிய இடத்தில் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். எத்தகைய இழப்புகளை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் மிகவும் தைரியத்துடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் சன்னி லியோன்.
இது பற்றி பிரபுதேவா கூறும்போது, ‘‘நீண்ட காலமாகவே இது சினிமா உலகில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு நியாயம் கிடைக்க வேண்டியது அவசியமாகிறது’’ என்றார்.