அக்டோபர் 11ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் வாழை திரைப்படம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா, விமல் பொன்வேல் என பல பிரபலங்கள் நடித்த வாழை திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அவர் இதற்கு முன்பு இயக்கிய கர்ணன், பரியேறும் பெருமாள் திரைப்படங்கள் உட்பட சமீபத்தில் வெளியான வாழை திரைப்படமும் மக்களின் இயல்பான கதைக்களம் மற்றும் வாழ்க்கை அமைப்பை திரையில் காட்டுவதாலேயே இந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. வாழை திரைப்படம் கடந்த 2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து இந்த திரைப்படத்திற்கு அதிகமான பாசிடிவ் கருத்துக்கள் வெளியானது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் எழுந்தது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி படம் தியேட்டரில் பல வாரங்கள் ஓடியது.

படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தை முக்கிய நட்சத்திரங்களுக்கு காண்பித்தது அவர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனத்தை இந்த திரைப்படத்திற்கு பிரமோஷன் உக்தியாக பயன்படுத்தினார்கள். இந்த திரைப்படம் பார்த்து பாலா உட்பட பலர் கண்கலங்கி அழுதனர். அதனாலேயே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளம்பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் தியேட்டரில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஜிட்டல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி கைப்பற்றி இருக்கிறது. இதில் வெளியான பிறகு மற்ற ஓடிடியில் வெளியாகும். இந்த திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபீஸ் வெற்றி காரணமாக இப்போது அக்டோபர் 11ஆம் தேதிக்கு வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.