வீடியோ லீக்: நெட்டிசன்களுக்கு சுளீர் பதில் அளித்த ஓவியா!

நேற்று அக்டோபர் 12ஆம் தேதி இணையத்தில் ஒருவரின் அந்தரங்க வீடியோ வேகமாக பரப்பப்பட்டது. மேலும், அந்த வீடியோவில் இருப்பது ஓவியா எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரிடமே ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு அட்டகாசமாக பதில் அளித்துள்ளார்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் ரசிகர்களின் மனம் கவரும் நடிப்பினை வெளிப்படுத்தி தனது முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தினைப் பெற்றார். ஓவியாவின் இயற்பெயர் ஹெலன் நெல்சன். சினிமாவிற்காக ஓவியா என மாற்றி வைத்துக் கொண்டார். இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களைக் கடந்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்றின் மிகவும் முக்கியமான போட்டியாளராக மாறினார். இவரது நடவடிக்கைகள் ரசிகர்களுக்குப் பிடித்து போனதால் ரசிகர்கள் இவருக்கு ஓவியா ஆர்மி தொடங்கி ஓவியாவுக்கு ஆதரவு அளித்தனர். மெரினா, களவானி, மூடர் கூடம், மதயானைக் கூட்டம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்னர் மலையளத்திலேயே இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் கவனிக்கத்தகுந்த பிரபலமாக மாறினார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம்பேர் பின் தொடருகின்றனர். ஒரு கட்டம் வரை ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஓவியா, அதன் பின்னர் கவர்ச்சியில் களமிறங்கினார். இவருக்கு அதிகம் ஊர் சுற்றும் பழக்கம் இருப்பதால் இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அங்கு அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் இவருக்கு தொடர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியே உள்ளார்.

இந்நிலையில் நேற்று இணையத்தில் இருவரின் அந்தரங்க வீடியோ பரப்பப்பட்டது. மேலும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஓவியா எனவும் கூறப்பட்டது. இதனால் ஓவியா என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இப்படியான நிலையில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் கமெண்ட் செக்‌ஷனில் ஒருவர், ’17 நொடிகளுக்கு வீடியோ வந்துள்ளது’ எனக் கூற, அதற்கு ஓவியா ‘என்ஜாய்’ என பதில் அளித்திருந்தார். அதன் பின்னர் அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார். மேலும் மற்றொருவர் வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா என கமெண்ட் செய்ய, அதற்கு ஓவியா, ‘அடுத்த முறை ப்ரோ’ என பதில் அளித்துள்ளார். அதேபோல் மற்றொரு இணையவாசியிடம் வீடியோவின் லிங்கையும் கேட்கின்றார்.

ஓவியாவின் இப்படியான பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக சினிமா பிரபலங்கள் குறித்து இது போன்ற வீடியோ வெளியானால், உடனே அது நான் இல்லை என மறுப்பார்கள். ஆனால் ஓவியா அவ்வாறு எதுவும் செய்யாமல், இணையவாசிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேபோல், இருவரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயத்தை மறைமுகமாக வீடியோ எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவது என்பது அபத்தமான செயல் என புரிந்து கொண்ட இணையவாசிகளும் ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் கொந்தளித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், “களவாணி படத்தில் அறிமுகமானார் ஓவியா. அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். எதுவாக இருந்தாலும் ஓபனாக பேசக்கூடியவர். கையில் சரக்கு பாட்டிலுடன் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு; ஏன் பெண்கள் இப்படி இருக்கக்கூடாதா என்று ஓபனாக கேட்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கொடுத்த கண்ட்டெண்ட் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனது. 90 ML படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று கேட்டதற்கு வரும் வாய்ப்பை எப்படி விடுவது என்று கூறினார். ஓவியாவை தொடர்ந்து தாக்குகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. இப்போது அவர் வீடியோ என்று ஒன்று சோஷியல் மீடியாவில் பரவிவருகிறது. அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பலரோ அந்த வீடியோவில் இருப்பது ஓவியாதான் என்று அடித்து கூறுகிறார்கள். அந்த உரிமையை எல்லாம் உங்களுக்கு யார் கொடுத்தது. இப்போது டீ ஏஜிங், ஏஐ என ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அப்படி இருக்கும்போது வீடியோவில் இருப்பது ஓவியாதான் என்று எப்படி சொல்கிறீர்கள். இந்தத் தொழில்நுட்பத்தையும், சமூக வலைதளத்தையும் இப்படி பயன்படுத்துவது ரொம்பவே தவறு. ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதுமாதிரியான வீடியோவை வேண்டுமென்றே வெளியிட்டிருக்கலாம்” என்றார்.