சூர்யாவின் கங்குவா பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10ம் தேதியே கங்குவா படம் ரிலீசாகவிருந்த நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

நடிகர் சூர்யா இரட்டை கெட்டப்புகளில் கலக்கியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தில் வரலாற்று பின்னணியிலான கதைக்களத்தை கையிலெடுத்துள்ளார் இயக்குநர் சிவா. படத்தில் 2 மணிநேர காட்சிகளில் வரலாற்று பின்னணியிலான கதைதான் வரும் என்று முன்னதாக இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். அரை நேர கதையே தற்போதைய காலகட்டத்தில் உள்ள சூர்யாவின் காட்சிகளாக படத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வரலாற்று கெட்டப்பில் உள்ள சூர்யாவின் லுக் அதிகமான பாராட்டுக்களை பெற்று வருகிறது. படத்தில் சூர்யாவிற்கு இணையாக வில்லன் கேரக்டரில் அதிரடி கிளப்பியுள்ளார் பாலிவுட் நடிகர் பாபி தியோல்.

படத்தின் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலங்கள் உள்ள நிலையில் தற்போதே படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. மும்பையில் இந்தப் படத்தின் பிரமோஷனில் பங்கேற்ற நடிகர் சூர்யாவை ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டு செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. பாலிவுட்டிலும் இதே போன்ற வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள கர்ணா படத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ளார்.

கங்குவா படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் நட்ராஜ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து பங்கேற்று வருகின்றனர். கங்குவா படத்தின் டைட்டில் கங்குவான் என்றிருந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் கங்குவா என்று மாற்றியதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், போக்குவரத்திற்காக போகும் காட்டுப்பதியில் ஞானவேல் ராஜா தன்னுடைய சொந்த செலவில் சாலை அமைத்ததாகவும் படக்குழுவினர் ரகசியம் பகிர்ந்தனர்.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. வரும் 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிங்கை வரவேற்க சென்னை மக்கள் தயாரா என்றும் ஸ்டூடியோ கிரீன் கேள்வி எழுப்பியுள்ளது. சிறப்பான வீடியோவையும் இந்த பதிவில் இணைத்துள்ளது.