திஷா பதானியின் தந்தையை மோசடி கும்பல் ஏமாற்றி பணம் பறிப்பு!

பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியான நடிகை திஷா பதானி தற்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திஷா பதானி வருத்தத்தில் இருக்கும் நிலையில், அவரது தந்தையை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி பணத்தை பறித்துள்ளது. இதுகுறித்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் பதானி ஓய்வுபெற்ற துணைக் கண்காணிப்பாளராக உள்ளார். அவருக்கு அரசு ஆணையத்தில் உயர் பதவி தருவதாக கூறி ஒரு மோசடி கும்பல் ரூ.25 லட்சத்தை ஆட்டையை போட்டு உள்ளனர். இதுகுறித்து அவர் உத்தரபிரதேச காவல் நிலையத்தில் சிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கர்க், ஜூனா அகாராவைச் சேர்ந்த ஆச்சார்யா ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஐந்து பேர் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், நம்ப வைத்து ஏமாற்றுதல், கிரிமினல் மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

திஷா பதானியின் தந்தை அளித்த புகாரில், சிவேந்திர பிரதாப் சிங் மற்றும் திவாகர் கர்க் என்பவர்கள் ஜெயபிரகாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவர், தனக்கு வலுவான அரசியல் தொடர்புகள் இருப்பதாகவும், இதனால், தலைவர், துணைத் தலைவர் அல்லது அரசாங்க ஆணையத்தில் மதிப்பு மிக்க உயர் பதவி நிச்சயம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார். இதற்காக ரூ. 25 லட்சத்தை கேட்டனர். நான் முதலில் ஐந்து லட்சம் ரூபாயை ரொக்கமாவும், மீதித் தொகையான ரூ. 20 லட்சத்தை மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தேன். இரண்டு மாதத்திற்குள் பதவி உதவி கிடைக்கவில்லை என்றால், பணத்தை வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால், பணம் கொடுத்து மூன்று மாதத்திற்கு மேலாகியும் எந்த ஒரு தகவலும் வரவில்லை, வட்டியும் வராததால், நான் பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அப்போது தான்,​​​​ அவர்கள் என்னை மிரட்டி, மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். அரசியலில் எனக்கு பல செல்வாக்கு இருக்கு என இவர்கள் அனைவரும் ஏமாற்றி வருகின்றனர். இந்த மோசடிக்கு பின் பெரிய அளவில் மோசடி நடந்து இருக்க வாய்ப்பு இருக்கு என்று திஷா பதானியின் தந்தை அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை, மேலும் அவர்களை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும், கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.