சூர்யா – ஆர். ஜே. பாலாஜி படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படம் தயாராகி வருகிறது. நகைச்சுவையான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடரந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் பூஜை பொள்ளாச்சி – மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில், சூர்யா, ஆர். ஜே. பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஒரே கட்டமாக 35 நாள்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.
இந்த நிலையில் சூர்யா 45-ன் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் தினேஷின் மனைவியாக ஸ்வாசிகா நடித்து மக்களின் ஆதரவை பெற்றார்.
இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.