நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கர்ப்பம்?

பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.. இதையடுத்து, கிங்ஸ்லிக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சினிமாவில் குரூப் டான்சராக கேரியரை துவக்கியவர் ரெடின் கிங்ஸ்லி. ஆனால், நடனத்தில் தனக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகி, பொருட்காட்சிகளை நடத்தும் காண்ட்ராக்டர் பணிக்கு சென்றார். இதில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடத்தப்படும் பொருட்காட்சிகளின் காண்ட்ராக்டராக கிங்ஸ்லி உருவெடுத்தார். அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானமும் கிடைக்க துவங்கியது. பிறகு, நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம், வெள்ளி திரைக்குள் நுழைந்தார்.. டாக்டர் படத்திலும், கிங்ஸ்லி நடித்திருந்தார். தன்னுடைய வித்தியாசமான காமெடி, டயலாக் மாடுலேஷன் போன்றவற்றில் ரசிகர்களின் தனி கவனத்தை பெற துவங்கினார் கிங்ஸ்லி. இதனால், அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் கமிட் ஆகி, பிஸியான காமெடி நடிகராக உருவானார் கிங்ஸ்லி.

46 வயது வரை திருமணமே செய்துகொள்ளாமல் இருந்த ரெடின் கிங்ஸ்லி, கடந்த வருடம்தான் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.. மாஸ்டர் திரைப்படத்தில், விஜய்க்கு உதவி செய்ய வரும் டாக்டராகவும், ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கேரக்டரிலும் சங்கீதா நடித்திருக்கிறார். சுல்தான், வலிமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். ரெடின் கிறிஸ்த மதத்தை சேர்ந்தவர், சங்கீதா இந்து மதத்தை சேர்ந்தவர். எனினும், 2 முறைப்படியும் திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், சங்கீதா 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை தம்பதி இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் சீரியலில் இருந்து சங்கீதா திடீரென விலகியிருப்பதால், அவர் கர்ப்பமாக இருப்பதால்தான், சீரியலிலிருந்து விலகியிருக்கலாம் என்று சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரபரக்கின்றன. இதையடுத்து, 47 வயதில் அப்பாவாக போகும் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.