ஒரு நாள் விடுப்பு கிடைத்தால் அதை யாரிடமும் சொல்லாதீர்கள்: த்ரிஷா!

யாரிடமும் சொல்லவே சொல்லாதீங்க என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் த்ரிஷா. அதை பார்த்தவர்களோ த்ரிஷா ஏன் இப்படி சொல்கிறார் என்று புரியவில்லையே என குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

30 வயதை தொட்டுவிட்டால் ஹீரோயினாக நிலைப்பது கடினம் என சொல்வார்கள். ஆனால் 41 வயதில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. அஜித் குமார், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிலும் அஜித் குமாருடன் இரண்டு படங்களில் நடிக்கிறார். த்ரிஷாவின் கெரியர் கிராஃப் உச்சத்தை தொட்டிருப்பதில் அவரை விட அவரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். கை நிறைய படங்கள் வைத்து பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன் தோழிகளுடன் எங்காவது பயணம் செய்கிறார்.

படங்கள், பயணம் என எப்பொழுதும் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் த்ரிஷா. அடிக்கடி போஸ்ட் போடாவிட்டாலும் ஸ்டோரி போட்டு வருகிறார். இன்று இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்க பலரும் ஆவலாக உள்ளனர்.

அப்படி இருக்கும்போது இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா சொன்ன விஷயம் ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா கூறியிருப்பதாவது, உங்களுக்கு ஒரு நாள் விடுப்பு கிடைத்தால் அதை யாரிடமும் சொல்லாதீர்கள். ஒருவரிடம் கூட சொல்லாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

டே ஆஃப் கிடைத்தால் முதலில் நண்பர்களிடம் தானே சொல்வோம். அவர்களுடன் நேரம் செலவிட ஆசைப்பட்டு சொல்வோம். ஆனால் யாரிடமும் சொல்லாதேனு த்ரிஷா ஏன் சொல்கிறார் என புரியவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45 ‘ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடி யாரும் இல்லை எனவும் நடிகை திரிஷா இப்படத்தில் வக்கீலாக நடிக்கிறார் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிமேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.