விராட் கோலி குறித்து ரசிகர் கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்!

நடிகை மாளவிகா மோகனனுக்கு ரசிகர் ஒருவர் விராட்கோலி குறித்து கேள்வி கேட்டார். அதற்கு அவரது பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகை மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்டை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான தங்கலான் படம் பெரும் வெற்றிப்படமாக மாறியது. குறிப்பாக, தங்கலான் படத்தில் இவர் நடித்த ஆரத்தி கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை மட்டும் இல்லாமல், பெரும் பாராட்டையும் பெற்றது. தங்கலான் படம் வெளியாகி ஒரு மாத காலத்திற்குள், இந்தியில் யுத்ரா படம் வெளியானதால், ஹிந்தியில் இவருக்கான ஓப்பனிங் என்பது சிறப்பாகவே அமைந்தது. மாளவிகா மோகனன், படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், அவ்வப்போது விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்வார். மேலும் இந்தப் புகைப்படங்கள் ட்ரெடிஷ்னல் டிரஸ் தொடங்கி, மார்டன் ட்ரஸ் வரையிலும் அதேபோல், ஹோம்லி லுக் தொடங்கி கிளாமர் லுக் வரையிலும் அவர் எடுத்தவைதான்.

பெரும்பான்மையான இந்திய சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ள மாளவிகா மோகனனை இன்ஸ்டாகிராமில் மட்டும், கிட்டத்தட்ட, 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவ்வப்போது, தனது ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடுவார். இந்த உரையாடலின்போது தனது ரசிகர்களை கேள்வி கேட்கச் சொல்லி, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் மாளவிகா மோகனன். அந்த வகையில் இன்று அதாவது, டிசம்பர் 24ஆம் தேதி மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் நடத்திய ரசிகர்களுடனான உரையாடலில், ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் விராட் கோலி குறித்து ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்கச் சொன்னார். ரசிகரின் இந்தக் கேள்விக்கு மாளவிகாவின் பதில் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. அதாவது, மாளவிகா மோகனன் ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்காமல், “🤴” இந்த ஒற்றை எமோஜியைத் தட்டிவிட்டுள்ளார். அதாவது அந்த எமோஜி மூலம், விராட் கோலியை கிங் என கூறுகின்றார் மாளவிகா. இவரது இந்த பதில் விராட் கோலி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த உரையாடலில் மாளவிகா மோகனன், தங்கலான் படத்தில் நடித்த ஆரத்தி கதாபத்திரம் சிறப்பாக இருந்ததாகவும், அதில் அவர் சிறப்பாக நடித்ததாகவும் பாராட்டினார்கள். அதேபோல் தனது ரசிகர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என மாளவிகா அந்த உரையாடலில் தெரிவித்தார். மேலும் கிருஸ்துமஸ்ஸை தான் அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்களுடன் கொண்டாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.