நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவரது திரைப்பயணம் தொடங்கி அண்மையில்தான் 22 ஆண்டுகள் நிறைவடைந்தது கொண்டாடப்பட்டது. 22 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இன்றைக்கும் டாப் நடிகையாக உள்ளார் த்ரிஷா. இவர் தனது இன்ஸ்டார்கிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள போஸ்ட் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
த்ரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித்துக்கு மனைவியாக நடித்துள்ளார்ர். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் தான் கதாநாயகியாக அறிமுகமாகிய மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்தார். தற்போது, சூர்யாவின் 45வது படத்திலும் நடித்து வருகின்றார்.
நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தெரு நாய்களைப் பாதுகாக்காவும் பராமரிக்கவும் அதிக அக்கறை காட்டி வருபவர். இவரது வீட்டில் இவர் வளர்த்து வந்த இவரது செல்லப் பிராணி ஜோரோ கடந்த 25ஆம் தேதி அதாவது கிருஸ்துமஸ் தினத்தில் உயிரிழந்தது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் எனது மகனை இழந்து விட்டேன். பெரும் துயரத்தில் உள்ள எங்களுக்கு, இந்த ஆண்டு கிருஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை என பதிவிட்டிருந்தார். த்ரிஷாவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது. பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இப்படியான நிலையில் த்ரிஷா தனது செல்லப் பிராணி இறந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதை தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். குறிப்பாக, தனது செல்லப்பிராணி புதைக்கப்பட்ட இடத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள த்ரிஷா, அதில், ” நீ இல்லாமல் நான் எப்படி வாழவேண்டும் என, எனக்கு கற்றுக் கொடுக்காமல் போய்விட்டாய்” என பதிவிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தனது செல்லப்பிராணி ஜோரோ இறந்தது தொடர்பாக அவர் முதன் முதலில் தெரிவிக்கும்போது, “கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் தனது மகன் ஜோரோ இறந்துவிட்டான். அவனது மறைவால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை நான் கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கிறேன். என்னை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும் ஜோரோ இல்லாமல் என் வாழ்க்கை பூஜ்ஜியமாக மாறிவிட்டது. இப்போதைக்கு என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. சில நாட்கள் வேலைக்கு வரப்போவதில்லை. சோஷியல் மீடியா உள்ளிட்ட எதிலும் ஆர்வம் செலுத்த முடியாது” என பதிவிட்டிருந்தார்.
த்ரிஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகாததால், அவரது செல்லப் பிராணியை அவரது மகன்போல நினைத்து வளர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.