பிறக்கும் போது முஸ்லீம்.. இப்போ கிறிஸ்டியன்: ரெஜினா!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ரெஜினா, பிறக்கும் போது முஸ்லீம், இப்போ கிறிஸ்டியனாக மதம் மாறிவிட்டதாக கூறியுள்ளார்.

நடிகை ரெஜினா, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, விஷாலின் சக்ரா, தலைவி, காஞ்சனா 3, கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை ரெஜினா கசாண்ட்ரா, மதம் மாறியதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், என் அம்மா கிறிஸ்டியன், என் அப்பா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். நான் பிறந்த போது முஸ்லீமாகத் தான் பிறந்தேன். என் வாழ்க்கையில் முதல் ஆறு வருடங்கள் என் பெயர் ரெஜினா இல்லை. வேறு பெயரில் தான் என்னை அழைத்தார்கள். என் அம்மா அப்பாவுக்கும் விவகாரத்தான பிறகு என் அம்மா நான் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் அப்போதுதான் அது சரியாக இருக்கும் என நினைத்தார். அவர்களுக்கு இஸ்லாம் மதம் தெரியாது என்பதால் அவர்கள் என்னை கிறிஸ்டியனாக வளர்த்து அந்த மதத்தை பின்பற்ற சொன்னார்கள். அதன் பிறகு தான் நான் ஞானஸ்தானம் பெற்று பைபிள் படித்தேன். பின் என் பெயர் ரெஜினா கசாண்ட்ரா என்று மாற்றம் செய்யப்பட்டது என்று ரெஜினா மதம் மாறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.