உலகம் முழுவதும் அதிவேகமாக மிகப்பெரிய சாதனையை கேஜிஎஃப் 2 திரைப்படம் படைத்துள்ளது.
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் இந்த ஆண்டு 1,100 கோடி வசூலை அள்ளிய நிலையில், அதற்கு அடுத்த இடத்தில் கேஜிஎஃப் 2 உள்ளது. இந்நிலையில், அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கேஜிஎஃப் 2 படத்தின் ஓடிடி உரிமத்தை அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 கோடி வசூலை இந்த படம் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ராக்கி பாய் ராஜ்ஜியம் தான்.
அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தான் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய படங்கள் ரிலீசான 4 வாரத்தில் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், கங்குபாய் கத்தியவாடி, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் அப்படி சீக்கிரமாக வெளியாகவில்லை. 44 நாட்கள் கழித்து வரும் மே 27ம் தேதி அமேசான் பிரைமில் கேஜிஎஃப் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. 100 கோடி பட்ஜெட்டில் கன்னட திரையுலகில் உருவாக்கப்பட்ட கேஜிஎஃப் 2 திரைப்படம் 1000 கோடியை வசூலித்து சாதனை படைத்த நிலையில், ஓடிடி வியாபாரத்திலும் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி உள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் அதிகபட்சமாக 350 கோடி ரூபாய் கொடுத்து கேஜிஎஃப் 2 படத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.