சல்மான் கான், அவரது தந்தைக்கு கொலை மிரட்டல்!

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான், அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பது ஹிந்தி சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான், அவரது தந்தை சலீம் கான் ஆகியோர் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா என்ற இடத்தில் வசிக்கின்றனர். சலீம் கான் நேற்று காலை தன் உதவியாளருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒருவர் உதவியாளரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார். அந்தக் கடிதத்தை பிரித்துப் படித்த சலீம் கான் அதிர்ச்சி அடைந்தார். அதில் சலீம் கான், சல்மான் கான் ஆகிய இருவரையும் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.