ஏ.ஆர். ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து ஜிஎஸ்டி கமிஷனர் விளக்கம்!

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 அக்டோபரில் ஜிஎஸ்டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் ஜிஎஸ்டி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரகுமானை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.