சாதி, மதம், கோயில், சாமியார் வேண்டாம்: விஜய் ஆண்டனி

கடவுள் தன் முன் வந்தால் சாதி, மதம், கோயில், சாமியார் வேண்டாம் என்று வரம் கேட்பேன் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் விஜய் ஆண்டனி பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். விஜய் ஆண்டனி முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான நான் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக சலீம், பிச்சைக்காரன் என இவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்களும் வெற்றிபெற்றன. இதனால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்தார். தொடர்ந்து சைத்தான், எமன், அன்னாதுரை, காளி, திமிர் பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் என பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி என பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார். ஆனால் சில படங்கள் சிக்கல்களால் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருகின்றன.

இதுபோக பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என புதிய படங்களில் நடிக்கவும் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி இருக்கிறார். சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள ரத்தம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று நிறைவடைந்ததது. ரசிகர்கள் இதனை தொடர்ந்து விரைவில் திரைப்படம் வெளியாகும் என இயக்குநர் அறிவித்தார். இவரது வித்தியாசமான கதை தேர்வை விரும்பியே பலர் விஜய் ஆண்டனியின் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், “கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, கோரிக்கையாக கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?” என்று குறிப்பிட்டுள்ளார்.