நாய் சேகர் ரிட்டன்ஸ் தோல்விக்கு கடுமையான விமர்சனம் தான் காரணம்: வடிவேலு

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு கடுமையான விமர்சனங்களே காரணம் என்று வடிவேலு கூறியுள்ளார்.

வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர். இவரின் உடல் மொழியாலும், நகைச்சுவை திறனாலும் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவரின் நகைச்சுவைக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இன்றைய இளைஞர்கள் மீம்ஸ் போடுவதற்கு இவரின் காமெடியை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு அன்றாட வாழ்க்கையில் இவரின் காமெடி கலந்துள்ளது.

இந்நிலையில் இடையில் சில காலம் சில பிரச்சனைகளால் வடிவேலு படங்களில் அந்த அளவிற்கு நடிக்கவில்லை. தற்போது ஒருவழியாக அந்த பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் வடிவேலு. அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சுராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக செம அப்சட்டில் இருக்கின்றார் வடிவேலு.

இந்நிலையில் இந்த படத்தைப்பற்றி சமீபத்தில் வடிவேலு பேசியுள்ளார். அவர் பேசியதாவது:-

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் எனக்கு ஒரு சிறந்த கம்பாக் படமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் சிலர் யூடியூபில் வேண்டுமென்றே படத்தை பற்றி மோசமாக விமர்சனம் செய்து படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டனர். ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டு படமெடுத்தால் சிலர் மோசமான விமர்சனங்கள் மூலம் படத்தை தோல்வியடைய செய்கின்றனர். அவர்களை அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.