திரை உலகத்திற்கு வெற்றிமாறன் ஒரு முக்கியமான இயக்குநர்: இளையராஜா!

விடுதலை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, வெற்றிமாறன் திரை உலகத்திற்கு ஒரு முக்கியமான இயக்குநர் என்று கூறினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், விடுதலை, இப்படத்தில், பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜிவ் மேனன், சேட்டன், இளவரசு என ஏராளமானோர் நடித்துள்ளார். இதில், போலீஸ் கான்ஸ்டபிளாக சூரியும், வாத்தியார் பெருமாள் என்ற போராளியாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக விடுதலை என்ற படத்தை உருவாக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின், முதல் பாகத்தின் படத்தின் இசை வெளியீடு மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இளையராஜா, இந்த திரைப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத ஒரு களத்தில் நடக்கும் கதையாக இருக்கும், வெற்றிமாறன் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதையாக இருக்கும். கடல் அலையாக வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலையும் வேறு வேறு அலையாகவே இருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. திரை உலகத்திற்கு இவர் ஒரு முக்கியமான இயக்குநர், 1500 படத்திற்கு இசை அமைத்த பின் இதை நான் சொல்கிறேன். 1500 படங்கள் என்றால்,1500 இயக்குனர்களை பார்த்தவன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த படத்தில் இதுவரை கேட்காத இசையை நீங்கள் கேட்பீர்கள் என்றார்.