பீட்டர் பால் எனது கணவரல்ல; நான் அவரது மனைவியும் அல்ல: வனிதா

பீட்டர் பாலுக்கு நான் மனைவியும் அல்ல. அவர் என்னுடைய கணவரும் அல்ல என்று வனிதா கூறியுள்ளார்.

வனிதாவிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர்பால் என்பவருடன் கிறிஸ்துவ முறைப்படி 3வது திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. தனது யூடியூப் சேனலுக்கு உதவியதாக பீட்டர்பால் அறிமுகமாகியதாக வனிதா தெரிவித்திருந்தார். பின்னர் 2020லேயே இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் இருந்த பீட்டர்பால் சமீபத்தில் காலமானார்.ஊடகங்கள் வனிதாவின் கணவர் இறந்துவிட்டார் என கூறியதால் வனிதா கவலையுற்றதாக தெரிகிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த விஷயத்தைப் பற்றி பேசலாமா வேண்டாமா என யோசித்தப் பிறகே வேறு வழியின்றி இதை சொல்கிறேன். அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் பணிவான கோரிக்கையாக தெரிவிப்பதாவது, “அதிகாரபூர்வமாக நான் பீட்டர் பாலை திருமணம் செய்யவில்லை. 2020இல் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்; அதே வருஷம் பிரிந்தும் விட்டோம். நான் அவரது மனைவியும் அல்ல. அவர் என்னுடைய கணவரும் அல்ல. நான் அதிகாரபூர்வமாக தனியாக இருக்கிறேன். எனக்கு கணவர் யாருமில்லை. எந்த இழப்பினை நினைத்தும் வருத்தமில்லை. எனது வாழ்க்கையை ரசித்து வாழ்கிறேன்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என அறிக்கை விடுத்துள்ளார்.