பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு நடிகர் விக்ரம் விளக்கம்!

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு விளக்கமளித்து நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் மீது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப் குற்றம் சுமத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக புகழ்பெற்ற ‘கேன்ஸ்’ திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் கடந்த 16 ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பாக ஐஸ்வர்யா ராய், சாரா அலிகான், அனுஷ்கா சர்மா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவிற்காக இவர்கள் வித்தியாசமான உடையில் வந்தது இணையத்தில் வைரலானது.

இவ்விழாவில் பல மொழிகளை சார்ந்த படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து ‘கென்னடி’ என்ற படம் வரும் 24 ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்தப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசினார். அதில், இந்தப்படத்தின் கதையை நான் விக்ரமை மனதில் வைத்து தான் எழுதினேன். இதற்காக அவரை தொடர்பு கொண்ட போது விக்ரம் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அதன்பிறகு தான் வேறொரு நடிகரை வைத்து இயக்கினேன். ஆனால் விக்ரமின் செல்ல பெயரான ‘கென்னடி’ என்பதையே படத்தின் தலைப்பாக வைத்தேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யுப்பின் குற்றச்சாட்டிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் நடிகர் விக்ரம். அதில், “இந்தப்படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்தையும், நான் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என்பதையும் நீங்கள் சொன்னதாக கேள்விப்பட்டேன். எனக்கு எந்தவிதமான மின்னஞ்சல், மெசேஜ் உங்களிடமிருந்து வரவில்லை. நீங்க என்னை தொடர்பு கொண்ட இமெயில் ஐடி செயல்பாட்டில் இல்லை. அதற்கு முன்பு என் நம்பரும் மாறிவிட்டது. ஏற்கனவே இதுகுறித்து உங்களுக்கு விளக்கமளித்துள்ளேன். உங்கள் ‘கென்னடி’ படத்தை திரையில் பார்க்க நான் ரொம்பவும் ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் அதில் என்னுடைய பெயரும் உள்ளது. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

அனுராக் காஷ்யுப்பிற்கு விளக்கமளித்து விக்ரம் பகிர்ந்துள்ள இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.