ஏதாவது செய்தியை எடுக்கும் முன்பு அதை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்: ஹன்சிகா

தான் நடிக்க வந்த புதிதில் ஹன்சிகாவுக்கு தெலுங்கு இளம் ஹீரோ ஒருவர் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் ஹன்சிகா. ஏதாவது செய்தியை எடுக்கும் முன்பு அதை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த ஹன்தசிகா தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் அவரை பற்றிய ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இளம் ஹீரோ ஒருவர் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் என்று செய்திகள் வெளியாகின. நான் சம்மதிக்காத போதிலும் அந்த ஹீரோ என்னை சும்மாவிடவில்லை. இதனால் நான் அசவுகரியமாக உணர்ந்தேன். இதையடுத்து அந்த ஹீரோவுக்கு சரியான பாடம் புகட்டிவிட்டேன். அதனால் இனி அந்த ஹீரோ எனக்கு தொல்லை கொடுக்க மாட்டார் என ஹன்சிகா பேட்டி கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. அந்த செய்தியை டுவிட்டரில் பார்த்த ஹன்சிகா உடனே விளக்கம் அளித்துள்ளார்.

ஹன்சிகா டுவிட்டரில், இப்படி ஒரு பேட்டியை நான் கொடுக்கவில்லை. கண்டதையும் வெளியிடுவதை நிறுத்துங்கள் என்றார். அவர் மற்றொரு டுவீட்டில் தெரிவித்திருப்பதாவது, ஏதாவது செய்தியை எடுக்கும் முன்பு அதை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தற்போது வலம் வரும் பேட்டியை நான் கொடுக்கவே இல்லை. சும்மா வெளியிடும் முன்பு தயவு செய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.