புகைப்படத்துடன் விஜய்க்கு பர்த்டே விஷ் சொன்ன த்ரிஷா!

நடிகர் விஜய், த்ரிஷா இணைந்து லியோ படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய், த்ரிஷா இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் சூப்பர்ஹிட் ஜோடியாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் மற்றும் தற்போதைய படங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் விஜய், தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரைக்காட்டிலும் அவரது ரசிகர்கள் இந்த நாளை திருவிழாவாக கொண்டாடினர். ஒரு பக்கம் காமன் டிபியையும், வீடியோக்களையும் ரசிகர்கள் வெளியிட்ட நிலையில், மறுபுறம் லியோ படக்குழுவினர் படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை தொடர்ந்து கொடுத்தனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காஷ்மீர் மலைப்பகுதியில் பனிகளுக்கிடையில் விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் மிகவும் க்யூட்டாக காணப்படுகின்றனர். முன்னதாக விமானநிலையம் உள்ளிட்ட இடங்களிலும் தனியாகவும் ரசிகர்களுடன் இணைந்தும் இவர்கள் இருவரும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் மற்றும் த்ரிஷா இருவரும் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.