தோனியும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்ஷியும். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.
நேற்று சென்னையில் படத்தின் இசை, டிரைலரை வெளியிட்டு தோனி பேசியதாவது:-
எனது முதல் டெஸ்ட் போட்டி (2005)சென்னையில்தான் துவங்கியது. எனது அதிகபட்ச டெஸ்ட் (224) ரன்களும் சென்னையில்தான். தற்போது எனது முதல் படமும் தமிழில்தான். சென்னை எனக்கு எப்போதும் சிறப்பானது. ஐபிஎல் தொடங்கியப் பிறகு நான் தமிழநாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன். நமது எல்லோரது வீட்டிலும் மனைவிகள்தான் எஜமான். ஹரிஷ் கல்யாண் மனைவிக்கும் அம்மாவிற்கும் இடையே சாண்ட்விச் போல சிக்கிக் கொண்டு இருப்பதுதான் படம். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கபடவில்லை.