பாலிவுட்டில் பிரபல நடிகையான கஜோல், நான் நடிகை தான் அதற்காக இப்படியா நடந்து கொள்வீர்கள் என்று செய்தியாளர்களிடம் கடுமையாக பேசி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையான கஜோல், தற்போது வெப் தொடர்களில் நடித்துள்ளார். விவகாரமான லஸ்ட் ஸ்டோரீஸ்2 ல் நடித்திருந்தார். தற்போது, தி ட்ரையல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடர் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கணவனால் கைவிடப்பட்ட பெண் வாழ்க்கையில் எதிர்த்து வாழ்வது குறித்து பேசப்பட்டுள்ளது. தி ட்ரையல்: 8 எபிசோடுகள் கொண்ட தி ட்ரையல் என்ற வெப் தொடரில், நோயோனிகா சென்குப்தா என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கஜோல் அட்டகாசமாக நடித்திருந்தார். இதில்,விவகாரமான ஒரு முத்தக்காட்சியில் இவர் நடித்தது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கஜோல், நான் ஒரு நடிகை என்றாலும், எனக்கும் சில அசௌகரியங்கள் இருக்கும் என்பதை உணர வேண்டும். ஒரு பிரபலத்தின் வாழ்க்கையில் இது ஒரு பகுதி தான் என்றாலும், எல்லா இடங்களிலும் எங்களை பின்தொடருவது என்பது ஏற்கமுடியாது, ஒருநாள் நான் பாந்த்ரா தாண்டி போகும் போது, எனது காரை பார்த்ததும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சில புகைப்பட கலைஞர்கள் என்னை பின்தொடர்ந்து வந்தனர். நான் அப்போது படப்பிடிப்புக்கு செல்லவில்லை, சில தனிப்பட்ட விஷயத்திற்காக செல்கிறேன் என்று சொன்ன பிறகும் தொடர்ந்து வந்து தொலை கொடுக்கின்றனர்.
இதுகூட பரவாயில்லை. என் மகள் நைசா தேவ்கன் எங்கு சென்றாலும் அவரை புகைப்பட கலைஞர்கள் விரட்டி சென்று படம் பிடிக்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அவளுக்கும் ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. இதை அவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் கசப்பான அனுபவமாக அமைந்து விடுகிறது என்றார்.