வெளியானது ‘லியோ’ படத்தின் சஞ்சய் தத் கிளிம்ப்ஸ் வீடியோ!

விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் லுக்கை வெளிப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் லுக்கை வெளிப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவை பொறுத்தவரை தொடக்கத்தில் கழுகின் சப்தத்துடன் தொடங்குகிறது. அடுத்து ஒரு மாஸாக கூட்டத்துக்கு நடுவே சஞ்சய் தத் நடந்து செல்கிறார். ‘ஆண்டனி’ என பெயல் ஒலிக்க சஞ்சய் தத்தின் முழு முகமும் காட்டப்படுகிறது. முறுக்கு மீசை, தாடியுடன் சிகரெட்டை பிடித்தபடி வணக்கம் வைக்கும் அவரது லுக்கும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தின் பெயர் ஆண்டனி தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சஞ்சய் தத் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தில் அவரது கேரக்டருடன் கூடிய வீடியோ ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.