சிறந்த படத்திற்கான விருது கடைசி விவசாயி படத்திற்கு கிடைத்துள்ளது!

சிறந்த படத்திற்கான விருது கடைசி விவசாயி படத்திற்கும் ,சிறந்த பின்னணி பாடகிக்கான விருது ஷ்ரேயா கோஷலுக்கும் கிடைத்துள்ளது.

69 ஆவது திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் திரையுலகை சார்ந்த பலரும் விருதுகளை தட்டி செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாகவே நடந்துள்ளது அவர்களை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த படத்திற்கான விருதை கடைசி விவசாயி திரைப்படமும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்தில் பாடியதற்காக ஷ்ரேயா கோஷலுக்கும் வழங்கப்பட்டது. ஜெய் பீம் படத்தில் நடித்த சூர்யாவிற்கும், கர்ணன் படத்தில் நடித்த தனுஷிற்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தனர். மேலும் சார்பட்டா பரம்பரை படத்திற்காக ஆர்யாவிற்கும் மாநாடு படத்தில் நடித்ததற்காக சிம்புவிற்கும் விருது கிடைக்கும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் யாருக்குமே கிடைக்கவில்லை.

இருந்தாலும் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு விருது கிடைத்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. சிறந்த படத்திற்கான விருதை கடைசி விவசாயி தட்டி சென்றது.
மேலும் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்திற்காக ஷ்ரயா கோஷல் பெற்றார்.

RRR திரைப்படம் அதிகபட்சமாக ஆறு தேசிய விருதுகளை தட்டி சென்றது. அதோடு அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படமும் விருதுகளை வென்றது. இதைப்பார்த்த தமிழ் ரசிகர்கள் பலர் தங்களை ஏமாற்றத்தை தெரிவித்து வருகின்றனர்.தமிழ் படங்கள் சிறப்பாக இருந்தும் அதற்கு விருதுகள் கிடைக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. படத்தில் விவசாயியாக நடித்த நடிகர் நல்லாண்டி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்திருந்தனர். அழுத்தமான திரைக்கதையால் விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்ட 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் ‘கடைசி விவசாயி’ இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதையும் ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது.