நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி 6 கேள்விகள்!

பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மனிஷா யாதவ் கூறிய குற்றச்சாட்டுக்கு 6 கேள்விகள் மூலம் இயக்குநர் சீனு ராமசாமி பதிலளித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. அடுத்ததாகக் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மனிஷா யாதவ் கூறிய குற்றச்சாட்டுக்கு 6 கேள்விகள் மூலம் இயக்குநர் சீனு ராமசாமி பதிலளித்துள்ளார். அதில், சில கேள்விகள் flash back ..

1) இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மனிஷா,

2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பிலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?

4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?

5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தாயாருடன் தங்கிருந்த மனிஷாவை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

6) அந்த 28 டேக் மேக்கிங் விடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன். இவ்வாறு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.