நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்!

நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் ‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, இவர் ‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சமந்தா, “ட்ரலாலா பிக்சர்ஸ் புதிய தலைமுறை யோசனைகளைத் திரையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அர்த்தமுள்ள, துல்லியமான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல இது ஒரு தளமாகும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், தான் சிறுவயதில் கேட்ட ‘பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்’ என்ற ஆங்கிலப் பாடலில் உள்ள ட்ரலாலா என்ற வார்த்தையில் இருந்து தான் இந்தப் பெயர் வந்ததாக சமந்தா விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமந்தா, எம் டிவியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.