‘ஃபைட் கிளப’ படத்தை பார்த்து சூர்யா பதிவிட்ட பதிவு இப்போது வைரல்!

அறிமுக இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ஃபைட் கிளப். ரிலீஸ் ஆன ஒரே நாளில் எக்கச்சக்க வரவேற்பை பெற்றுவரும் இந்த படத்தின் ஹைப் இப்போது மேலும் உயர்ந்திருக்கிறது. சூர்யா படத்தை பார்த்து பதிவிட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி நேற்று ரிலீஸான திரைப்படம் ஃபைட் கிளப். உறியடி படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜயகுமார் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மோனிஷா மோகன் மேனன் எனும் புதுமுக கதாநாயகி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர்கள் மட்டுமல்லாது கார்த்திகேயன் சந்தானம் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனரான அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த திரைப்படம் ஃபைட் கிளப். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் வழங்கி இருக்கிறார். பக்காவான ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு முதல் நாளிலேயே அதிக ஆடியன்ஸ் படத்தை பார்க்க வந்திருந்தார்கள். உரியடி விஜயகுமார் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது இந்த படத்தின் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது அதனால் இந்த படத்திற்கு முதல் நாளிலேயே அதிக கூட்டம் வந்திருந்தது.

ரிலீசான ஓரிரண்டு நாட்களிலேயே நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் ஃபைட் கிளப் படத்தை பல பிரபலங்கள் பார்த்து அவர்களது விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா ஃபைட் கிளப் படம் பார்த்து அவரது விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார். ‘மிகவும் ஸ்டைலிஸ் ஆன படம் என்றும் பக்கவான ஆக்சன் படமாக உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் உரியடி விஜயகுமார் செல்வா கதாபாத்திரத்தில் பார்த்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். இந்த படத்தின் இளம் தொழில்நுட்பவியலாளர்களும் சிறப்பான வேலை செய்திருப்பதாக அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளுக்கு நாள் ஃபைட் கிளப் படத்திற்கான வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சூர்யாவின் இந்த பதிவு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.