இயக்குனர் ‘ராமின் ஏழு கடல் ஏழு மலை’ படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு!

இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி, நடிகை அஞ்சலி, நடிகர் சூரி நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே செம்மயான சம்பவத்தை செய்துள்ளது. அடுத்தாண்டு பல உலக திரைப்படங்களோடு மோதவிருக்கிறது ஏழு கடல் ஏழு மலை.

தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக அவரது கெரியரை தொடங்கி கற்றது தமிழ் என்னும் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். அதன் பிறகு தங்க மீன்கள், தரமணி, சவரக்கத்தி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை எனும் படத்தை இயக்கியிருக்கிறார். ஏழு கடல் ஏழு மலை படம் மீனவர் மற்றும் அவரது வாழ்க்கை மையப்படுத்திய கதையாக அமைந்திருக்கும் என தெரிகிறது. தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் இந்த படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே வெளியானது.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறது. இயக்குனர் ராமின் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெறும். அதுமட்டுமல்லாது விருது, விமர்சனம் என அனைத்திலும் முன்னணி பெறும். சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது சில படங்கள் திரையிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாக இருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை ஏழு கடல் ஏழு மலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிகர்கள் சூரி அஞ்சலி மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.