இசைஞானி இளையராஜாவை சந்தித்த இயக்குனர் பா. ரஞ்சித்!

அட்டகத்தி படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமானார் பா. ரஞ்சித். தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார் ரஞ்சித். நேற்று திடீரென இசைஞானி இளையராஜாவை ரஞ்சித் நேரில் சந்தித்து இருக்கிறார்.

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அந்த படத்தை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது நடிகர் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி திருவோது ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படமான தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பொம்மைநாயகி உள்ளிட்ட சில படங்களை நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருக்கிறார் ரஞ்சித்.

இயக்குனர் பா.ரஞ்சித் சிறு வயதிலிருந்தே இசைஞானியின் தீவிர ரசிகர். தான் ஒரு இளையராஜா ரசிகன் என பல இடங்களில் ரஞ்சித் கூறியிருக்கிறார். நேற்று காலை இயக்குனர் ரஞ்சித் ‘பாபாசாகேவின் காதல் கடிதம்’ என்ற ஒரு புத்தகத்தை இளையராஜாவிற்கு கொடுத்து, அப்போது எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பதிட்டிருக்கிறார். அந்த பதிவின் கேப்ஷனாக ‘எண்ணமெல்லாம் வண்ணமம்மா’ என பதிவிட்டிருந்தார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை பார்த்துவருகிறார். முன்னதாக 2022 கேம்ஸ் திரைப்பட விழாவில் அவருடைய அடுத்த படமான வேட்டுவம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் வேட்டுவம் படத்தை அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் ஸ்டுடியோஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும் எனவும் கூறியிருந்தார்.

வேட்டுவம் படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமல்லாது தொலைக்காட்சி சீரியஸாகவும் எடுக்க திட்டமிட்டிருப்பதாக ரஞ்சித் கூறியிருந்தார். இது மதுரையில் நடக்கக்கூடிய கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தியிருக்கும் எனவும் ரஞ்சித் கூறியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடியவிரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வேட்டுவம் படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜாவை கேட்கவே இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.