ஆலியா பட்டின் சமீபத்திய ஆடை விலை 1.5 லட்சமா?

ஹிந்தி படங்களில் பிரதானமாக நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார் ஆலியா பேட். ஆலியா பட்டின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமாவை கடந்து அவரது ஆடைகளுமே செய்திகளாக மாறிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த அனிமல் படத்தின் வெற்றி விழாவில் ஆலியா பட் அணிந்திருந்த ஆடையின் விலை ஒன்றரை லட்சம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தி படங்களில் நடித்து உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருக்கிறார் நடிகை ஆலியா பட். திரைப்படங்களில் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பிரிட்டிஷ் அம்மாவுக்கும் இந்திய அப்பாவுக்கும் பிறந்த ஆலியா பட் இந்திய படங்களில் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வருகிறார். நடிகை ஆலியா பட் குறித்த ஒவ்வொரு செய்தியும் ரசிகர்களின் அதிகப்படியான கவனத்தை பெற்று வருகிறது. ஆலியா பட் சினிமா வாழ்க்கையாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் ஒவ்வொரு செய்தியும் ரசிகர்களின் பெரும் கவனத்தை பெறும். அதையெல்லாம் கடந்து ஆலியா பட்டின் ஆடைகளும் செய்தியாகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்து கொண்டார் ஆலியா பட். அப்போது அணிந்திருந்த புடவையை கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு தேசிய விருது வாங்கும்பொழுது அணிந்து சென்றார் ஆலியா பட். இந்த விஷயத்தை முன்னிறுத்தி நடிகர் ஷாருகானின் மகளும் நடிகையுமான சஹானா கான் பேசியிருந்தார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

அந்த வகையில் தற்போது கணவர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தின் வெற்றி விழாவிற்கு ஆலியா அணிந்து சென்ற ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என பல நடிகர்கள் நடிப்பில் கடந்த டிசம்பர் 1 வெளியான திரைப்படம் அனிமல். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ஹிட் கொடுத்த அனிமல் படத்தின் வெற்றி விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வெற்றி விழாவிற்கு நடிகர்கள் பட்டாளமே குவிந்திருந்தது. அந்த வகையில் ரன்வீர் கபூர், அலியா பட் மற்றும் அவர்களது உறவினர் கலந்து கொண்டிருந்தனர்.

அனிமல் படத்தின் வெற்றி விழாவிற்கு நீல கலர் நீண்ட கவுன் ஒன்றை அணிந்திருந்தார் ஆலியா பட். இந்த ஆடையில் ஆலியா பாட்டின் போட்டோஸ் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த ஆடையில் ஆலியா மிகவும் அழகாக இருக்கிறாரே என ஆடையின் விலையை தேடியிருக்கிறார்கள் நெட்டிசன்கள். அந்த வகையில், இந்த ஆடையின் விலை கிட்டத்தட்ட 1,820 டாலர் என தெரியவந்தது. இந்திய பண மதிப்புப்படி ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 408 (1,51,408) ரூபாயாகும்.

ஆங்காங்கே கிழிந்து கிடைக்கும் இந்த ஆடையா ஒன்றரை லட்சம் என ஒரு பக்கமும்.. இந்த ஆடையை மீண்டும் எத்தனை முறை அணிவார் ஆலியா என ஒரு பக்கமும்.. நட்சத்திரங்கள் விலை உயர்ந்த ஆடை அணிவது சகஜம் தானே என பலதரப்பட்ட கருத்துக்களை கூறிவருகிறார்கள் ரசிகர்கள்.