உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் களைகட்டிய ஆன்ட்ரியா நிகழ்ச்சி!

சென்னையில் நேற்றுமுன் தினம் துவங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்றும் தொடர்ந்தது. இரு தினங்கள் நடத்தப்பட்டுள்ள இந்த மாநாட்டில் முதலீட்டாளர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மேலும் கருத்தரங்கங்களும் அனுபவ பகிர்வு உரையாடல்களும் இந்த நிகழ்ச்சியில் நடந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆன்ட்ரியா பாடல்களை பாடி முதலீட்டாளர்களையும் பார்வையாளர்களையும் சிறப்பாக அசத்தினார்.

சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கி இரு தினங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தில் நிலவும் சிறந்த தொழில் சூழல் குறித்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பான வகையில் கருத்தரங்கங்களும் அனுபவ பகிர்வு உரையாடல்களும் நடந்தன. நிகழ்ச்சியில் பல விஷயங்கள் பிரம்மாண்டமான வகையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். தமிழகத்தின் மேம்பட்ட சூழல் மற்றும் மனித வளத்தை உலக அளவில் முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தி, புதிய தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும்வகையில் இந்த மாநாடு அமைந்தது. நிகழ்ச்சியில் முதலீட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும்வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இவற்றில் முக்கியமாக நடிகை ஆன்ட்ரியா மேடையேறி பாடல்களை பாடியது சிறப்பாக அமைந்தது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ன் நிறைவையொட்டி ஆன்ட்ரியா இந்தப் பாடல்களை பாடி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான கெட்டப்பில் மேடையேறி பாடிய ஆன்ட்ரியா, தன்னுடைய ஸ்டைலில் ஆட்டம் போட்டபடி பாடலும் பாடினார். முதலில் ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி பாடலை பாடி அசத்தினார். தொடர்ந்து Who is the hero பாடலை ஸ்டைலிஷ்ஷாக பாடினார். அவரது கெட்டப்பை போலவே அவரது பாடல்களும் ஸ்டைலாக அமைந்தன. தொடர்ந்து கோவா படத்தின் இதுவரை இல்லாத உணர்விது என்ற பாடலை பாடினார். அடுத்ததாக ஊ சொல்றியா மாமா என அடுத்தப் பாடலுக்கு தாவினார். தொடர்ந்து ரம்பம்பம் பாடலை ரம்மியமாக பாடினார். அவரது இந்த பாடல்கள், இறுக்கமாக சென்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மிகப்பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் பல சுவாரஸ்யங்கள் நடைபெற்ற நிலையில், நிறைவு விழாவில் முதலீட்டாளர்கள் கூட்டாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த மாநாடு மூலம் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.