தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு எமோஷனலாகி சில விஷயங்களை பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார். தற்போது ஃபேமிலி ஸ்டார் என்கிற படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். தொடர்ந்து பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு வரும் விஜய் தேவரகொண்டா, அவ்வப்போது சினிமா செய்திகளில் தலைப்பாகவும் மாறி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்வில் பங்கேற்ற தேவரகொண்டா எமோஷனலாகி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி, விஜய் தேவரகொண்டாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறும் விதமாக அமைந்திருக்கிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ஒரு படம் வெற்றியடைய வேண்டும் என நான் கூறினால் கண்டிப்பாக அது வெற்றி அடையும்.. ஆனால் லைகர் திரைப்படம் வெற்றி அடையாததை பார்த்தால் இப்படி ஒரு கதையை நீங்கள் ஏன் பார்க்கவில்லை என கேட்க தோணும்.
நான் மனதில் தோன்றுவதை பேசுபவன். ஒரு படம் ஹிட் அடிக்கும் என்றால் அதனை நான் பிளாக்பஸ்டர் என கூறுவேன்.. ஆனால் அடுத்து வரக்கூடிய எனது மூன்று படங்கள் குறித்து நான் எதுவும் பேசாமல் இருக்க போகிறேன்.. எனது வாயை மூடிக்கொண்டு இருக்கப் போகிறேன்.. எனது படங்கள் எனது வெற்றியை பேசட்டும்.. இது எனக்கு நானே கொடுக்கும் தண்டனை.. இதுவரை பலமுறை படங்கள் வெற்றி பெறும் என நான் கூறி, அது வெற்றி பெறாமல் போயிருக்கிறது.. இதற்கு நானே எனக்கு கொடுக்கும் தண்டனையாக பார்க்கிறேன்.. இவ்வாறு நடிகர் விஜய் தேவரகொண்டா பேசி இருக்கிறார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா இதுவரை எக்கச்சக்கமான படங்களில் நடித்திருக்கிறார். எனினும் இவரது சில படங்கள் மட்டுமே பேசப்பட்ட படமாக மாறியது. அந்த வகையில் அடுத்த மூன்று படங்களுக்கு எதையும் கூறப்போவதில்லை என அதிரடியாக கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.