தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தற்போது இவர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்து சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகிறது.
இயக்குநர் மணிரத்தினத்திடம் அசிஸ்டண்டாக பணியாற்றிய பிரியா என்பவர் இயக்கிய ‘கண்ட நாள் முதல்’ என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இப்படம் இவருக்கு நல்ல அறிமுக படமாக அமைந்தது என சொல்லலாம். முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்த ரெஜினாவுக்கு அடுத்த படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அழகிய அசுரா என்ற படத்தில் ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆனார். தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அதே வேகத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக்கொண்டார். சினிமா ரசிகர்களும் ரெஜினாவுக்கு அமோக வரவேற்பு கொடுத்து ஹீரோயினாக ஏற்றுக்கொண்டனர். தமிழை காட்டிலும் ரெஜினாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் அவ்வப்போது மட்டும் தலையை காட்டி வந்தார். அதன்படி சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், இயக்குநர் லோகேஷின் மாநகரம், உதயநிதியின் சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அதிலும் உதயநிதியுடன் “எம்புட்டு இருக்குது ஆசை” என்ற பாடலுக்கு கிளாமர் டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். இப்படியாக தமிழில் நல்ல வரவேற்பு இருந்தாலும் இவரின் கவனம் எல்லாம் தெலுங்கு சினிமா பக்கம் தான் இருந்தது. இதனால் தெலுங்கில் அதிக படங்களில் கமிட்டாகி செம்ம பிஸியாக நடித்து வந்தார். தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் கான்ஜுரிங் கண்ணப்பன். தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, பார்டர், ஃப்ளாஸ் பாக் ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்படியாக பல மொழி படங்களில் டாப் நடிகையாக வலம் வரும் ரெஜினா விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 33வயதாகும் ரெஜினா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சினிமா வட்டாரங்களிலும், இணையதளத்திலும் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து ரெஜினா எந்தவொரு ரியாக்சனும், அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இதனால் ரெஜினாவின் திருமணம் உறுதி என நெட்டிசன்கள் மனக்கணக்கு போட்டுள்ளனர். ஆனால் மாப்பிள்ளை யார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் ரெஜினாவின் திருமணம் இந்தாண்டு நடைபெற வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.