நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் தான் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்த நிலையில் அவருடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் வரலட்சுமி கோபமாக பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தவறாகவும் மோசமான கமெண்ட்களை போடும் நபர்களுக்கு வரலட்சுமி பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக நடிகை வரலட்சுமி கூறியுள்ளதாவது:-
நெகட்டிவாக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடும் நபர்களை பார்த்து நான் ஒன்றே ஒன்று தான் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய அம்மாவையோ தங்கையையோ அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களையோ எங்களை பேசுகிற மாதிரி தவறாக பேசுவீர்களா? உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களை அன்பாலோ செய்து கொண்டு போய் விட வேண்டியது தானே? எதற்காக அவர்களை நீங்கள் பாலோ செய்து அவர்களுக்கு கமெண்ட் அடித்து கஷ்டப்படுத்த வேண்டும். உங்களை நாங்கள் பாலோ செய்ய சொல்லி கேட்டோமா என்ன? நீங்களாக தானே பாலோ செய்றீங்க… அப்படி இருக்கையில் நாங்கள் பதிவிடும் பதிவுகள் பிடித்திருந்தால் லைக் போடுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள், அது உங்க விருப்பம்.
அதுபோல கண்டமேனிக்கு கமெண்ட் போடுறவர் முகம் தெரியாத ஆளாக இருக்கிறார். அப்படி முகம் தெரியாமல் கமெண்ட் அடிப்பவருக்கு என்ன தைரியம் இருக்கிறது. உண்மையிலேயே உங்களுக்கு கமெண்ட் அடிக்க வேண்டும் என்றால் நேருக்கு நேராக வந்து கமெண்ட் அடியுங்கள். நேருக்கு நேராக பேச தைரியம் இல்லாதவன் என்னை பொறுத்தவரையில் ஒரு கோழை. கோழையிடம் எனக்கு பேச விருப்பமில்லை என்று அந்த பேட்டியில் தன்னுடைய போஸ்ட்களுக்கு அசிங்கமாக கமெண்ட் போடும் நபர்களுக்கு நடிகை வரலட்சுமி பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் வரலட்சுமியின் இந்த கருத்துக்கு பல பிரபலங்களும் ஆதரவு கூறி வருகிறார்கள். எல்லோருக்கும் கையில் இருக்கும் செல்போன் மூலமாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கும் நிலையில் அதை சரியான முறையில் பயன்படுத்தாமல் அடுத்தவர்களின் மனம் புண்படும்படியும் அடுத்தவர்களுடைய பர்சனல் வாழ்க்கையை தவறாக சித்தரித்தும் பலர் பேசி வருகிறார்கள். தங்களுக்கு ஆதாயம் வர வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களின் மீது அநியாயமாக குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் தங்களுடைய பொன்னான நேரத்தை சரியாக பயன்படுத்தாமல் அடுத்தவர்களை குறை சொல்வதற்கும் அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்காக மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதற்கு வரலட்சுமியின் இந்த பேச்சு சரியான பதிலடி என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.