சிறுமியை கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக கூடாது: மதுரை முத்து!

மதுரை முத்து தமிழ்நாட்டு வழக்கறிஞர்களிடம் கையெடுத்து கும்பிட்டபடி வேண்டுகோள் வைத்து இருக்கிறார். நேற்று புதுவையில் இந்த ஒன்பது வயது சிறுமியை கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் கூறி இருந்தார். அதேபோல தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் ஒரு அறிக்கை விட வேண்டும் என்று மதுரை முத்து வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

பாண்டிச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தான் இணையத்தில் பலரையும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த செய்தியை கேட்டு பலரும் கொந்தளித்து வருகிறார்கள். பாண்டிச்சேரி மக்கள் அந்த சிறுமிக்காக நியாயம் கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரை முத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியுள்ளதாவது:-

வணக்கம்! முதலில் புதுச்சேரியில் வாழ்கின்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு என்னுடைய பணிவான வணக்கத்தையும், அன்பையும் சொல்லி பாராட்டுகிறேன். ஒட்டுமொத்த பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோரின் சார்பாக நான் இதை உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் ஒரு அழகான முடிவெடுத்திருக்கிறீர்கள். இதே மாதிரி தமிழகத்தில் சார்ந்த வழக்கறிஞர்கள் சங்கமும் இந்த மாதிரி ஒரு அறிவிப்பை தெரிவிச்சீங்கன்னா எல்லா பெற்றோர்களும் உங்களுக்கு காலமெல்லாம் வணக்கம் சொல்பவர்களாக நன்றிக்கடன் பட்டவர்களாகவும் இருப்போம்.

பாலியல் குற்றங்களுக்கு துபாயில் கொடுப்பது மாதிரி கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். கொலை செய்தவனையும் கற்பழிப்பில் ஈடுபட்டவனையும் துபாயில் நடுத்தெருவில் வைத்து கல்லால் அடித்து கொல்வது போன்று இல்லாட்டியும் கூட நம்முடைய நாட்டிலும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எடுத்த முடிவு கேட்கும்போது சிறிய ஆறுதலாக இருக்கிறது. பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும் மன நிம்மதியாக இருக்கிறது. அதிலும் இப்போதுள்ள குழந்தைகளுக்கு வாசிக்கும் திறன் எல்லாம் போயிடுச்சு.. நான் பூங்காவுக்கு வாக்கிங் போயிட்டு வரும்போது ஒவ்வொரு குழந்தையும் அங்கேயும் இங்கேயும் உட்கார்ந்து கொண்டு கையில் போனை வைத்து அதில் மூழ்கி இருப்பதை பார்க்கிறோம். அது எந்த வகையில் கொண்டு போகப் போகிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் எந்த செய்தியை புரட்டினாலும் அதில் போதை வஸ்துகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சொல்லப்படுகிறது. போதையில் இருப்பவன் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. அதனால் பெண் குழந்தைகள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த மாதிரி சூழ்நிலையில் புதுச்சேரி சங்கத்தினர் எடுத்த மாதிரி முடிவை நம்முடைய தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் சங்கமும் இனி எந்த பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கும் நாங்கள் ஆஜராக மட்டும் என்று முடிவெடுக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டபடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.