டி.ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மும்தாஜ் சமீபத்தில் பேட்டியில் தான் எதனால் சினிமாவில் இருந்து விலகினேன் என்பது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்
999 ஆம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரமாக 90ஸ் கிட்ஸ் மறந்துவிட முடியாது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “ஹலோ.. ஹலோ.. ஹலோ..பேரை நான் சொல்லவா”, “காதல் தேடி” மற்றும் மோனிஷா என் மோனலிசா என்ற பாடல்கள் பலருடைய ஃபேவரைட் சாங். அதிலும் இந்த திரைப்படத்தில் நடிகை மும்தாஜ் மோனிஷாவாக பலருடைய மனதை கவர்ந்திருந்தார். தன்னை ஒருதலையாக காதலித்த காதலனை தேடி திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் கண்ணீரோடு இவர் அழும் காட்சிகள் பலருடைய மனதை ரணப்படுத்தி இருக்கும். அதோடு பலரும் அந்த திரைப்படத்தில் மும்தாஜை திட்டி இருப்பார்கள். இப்படி முதல் திரைப்படத்திலேயே மும்தாஜ் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்திருந்தார். அதைத் தொடர்ந்து குஷி திரைப்படத்தில் “கட்டிப்பிடி கட்டிப்பிடிடா” பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறி இருந்தார். அதைத்தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாதன், லூட்டி, சொன்னால்தான் காதலா, வேதம், சாக்லேட் என்று பல திரைப்படங்களில் அடுத்தடுத்து மும்தாஜ் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல ஒரு சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்காகவும் டான்ஸ் ஆடி இருந்தார். அந்த நேரத்தில் மும்தாஜ் ஒரு கவர்ச்சி நடிகையாக தான் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் அவர் கலந்து கொண்ட பிறகு மும்தாஜ் மீதான பார்வை மக்களுக்கு மாறி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு மும்தாஜ் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் எதற்காக சினிமாவை விட்டு விலகினேன் என்று பேசியிருக்கிறார். அதில் நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். அல்லாஹ் எனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தின் அர்த்தம் தெரியாமலே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் மெல்ல மெல்ல மாற்றம் தொடங்கியது. அதன் காரணமாக தான் நான் சினிமாவில் இனி இருக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தேன். நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம். எல்லாமே என்னிடம் இருந்தும் நிம்மதி இல்லை என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது உங்களுக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும் என எனக்கு தெரியாது என்று சொல்லிக் கொள்வேன். அவர் என்னிடம் மெல்ல மெல்ல சில மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒருநாள் வீட்டில் அமர்ந்திருக்கும் போது நானே என்னை அறியாமல் என் உடையை சரி செய்தேன். வெளியே செல்லும்போது கண்ணியமாக உடை அணிந்தேன். சினிமாவில் நீச்சல் உடை அணிந்து நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட உடை அணிவது நிச்சயம் எல்லோருக்கும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று அந்த பேட்டியில் மும்தாஜ் பேசியிருக்கிறார்.