ஜோதிகாவின் சொத்து மதிப்பு சூர்யாவை விட 125 கோடி அதிகம்!

சூர்யா, ஜோதிகா இருவரின் சொத்து மதிப்பு 537 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் பங்கு 206 கோடி என்றும், ஜோதிகாவின் சொத்து மதிப்பு 331 கோடி என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் திரை உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி. சூர்யாவும் ஜோதிகவாவும் இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார். இதையடுத்து தொடர்ச்சியாக காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன் என அடுத்தடுத்து படங்களில் இணைந்து நடித்தனர். திரையில் ஜோடி சேர்ந்த சூர்யாவும் ஜோதிகாவும் கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர். ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறி வாழ்க்கையை துவங்கினர். திருமணத்திற்கு பிறகு திரையில் இருந்து விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ச்சியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது சூர்யா கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவராக தொடர்கிறார். தற்போது சூர்யா ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்துக்காக தனது கேரியரில் அதிகபட்சமாக 30 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படங்கள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சொந்த தயாரிப்பு நிறுவனமும் உள்ளது.

மேலும், சூர்யாவுக்கு இந்தியன் ஸ்ட்ரீட் லீக் மற்றும் வேறு சில விளையாட்டு லீக்குகளில் சொந்த அணிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் பல நூறு கோடி வருமானம் ஈட்டி வருகிறார் சூர்யா. தற்போது சூர்யா, ஜோதிகா இருவரின் சொத்து மதிப்பு 537 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் பங்கு 206 கோடி என்றும், ஜோதிகாவின் சொத்து மதிப்பு 331 கோடி என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவை விட ஜோதிகாவின் சொத்து மதிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. சூர்யாவை விட ஜோதிகா 125 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பது தெரிந்ததே. சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மும்பையில் விலை உயர்ந்த கட்டிடம் ஒன்றை வாங்கியுள்ளனர். கட்டிட மதிப்பு சுமார் 70 கோடி என கூறப்படுகிறது. சென்னையில் இருபதாயிரம் சதுர அடியில் சொந்தமாக விசாலமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் விலை நூறு கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.